இந்திய சினிமாவுக்கு பெருமை தேடி தந்த பிரபாஸ்...!

x

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆதிபுருஷ்', ட்ரைபெகா(TRIBECA) திரைப்பட விழாவில் ஜூன் 13ம் தேதி திரையிடப்படவுள்ளது. உலகம் முழுக்க உள்ள சினிமாவை சேர்ந்த புதிய திறமைகள், புதிய முயற்சிகள், கலை சார்ந்த சிறந்த படைப்புகளை அடையாளம் காண்பதற்கு பெயர்போனது, இந்த திரைப்பட விழா. புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டினிரோ-வால் 2002ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஸ்பைடர் மேன்3, ஸ்டார் வார்ஸ் போன்ற படங்களும் இந்த விழாவில் தான் முதலில் ப்ரிமியர் செய்யப்பட்டன. இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த திரைப்பட விழாவில் ஆதிபுருஷ் திரையிடப்படுவதால் ஒட்டுமொத்த படக்குழுவும் உற்சாகத்தில் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்