ஓபிஎஸ்-யை கோமாளியாக சித்தரித்து அதிமுக சார்பில் போஸ்டர்கள்.. பரபரப்பை கிளப்பிய கண்டன போஸ்டர்

x

அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை நீக்கியதற்கு பிறகும் அவர் தொடர்ந்து அதிமுகவின் கொடியை பயன்படுத்தி வருவதும் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை பற்றி பேசி வருவதையும் கண்டித்து உளுந்தூர்பேட்டையில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை கோமாளி போல சித்தரித்து அவரை கண்டித்து வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரை பொதுமக்கள் நின்று கவனித்து சென்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்