வீரவணக்க நாளில் காவல் சீருடையில் வந்த குட்டி போலீஸ் - காவல் துறையினரின் கவனத்தை ஈர்த்த சிறுவன்

x

சென்னை டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள் நிகழ்வில், ஏழு வயது சிறுவன் ஐபிஎஸ் அதிகாரி போல் சீருடை அணிந்து வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

காவலர் வீரவணக்க நாளை ஒட்டி, காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில், உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அப்போது, பெரம்பூரைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் தருண், ஐபிஎஸ் அதிகாரி போல் காவல் சீருடை அணிந்து, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினான்.

இந்த நிகழ்வு, அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்