செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த மனு - என்ன சொல்ல போகிறது சென்னை ஐகோர்ட்..?

x

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் உள்ளதால், அவரை விடுவிக்க உத்தரவிடக்கோரி அவரது மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்ததுடன், தொடர்ந்து நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது. அமலாக்கத்துறையினர் தங்கள் மருத்துவக் குழுவினரை கொண்டு பரிசோதனை செய்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது பதிலளிக்கும்டி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு, மனு மீதான விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, அந்த மனு, நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்