ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு - ஈபிஎஸ் போட்ட நெக்ஸ்ட் பிளான் | AIADMK | EPS | OPS

x

அதிமுக பொதுக்குழு தொடர்பாக, பி.வைரமுத்து, ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்யக்கோரி, ஈபிஎஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக, பி. வைரமுத்து, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை மறுதினம் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே, அந்த மனுக்களை தள்ளுபடி செய்யக்கோரி, எடப்பாடி பழனிசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தாக்கல் செய்யவில்லை என்றும், பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி மனு தாக்கல் செய்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உச்சநீதிமன்றத்தில் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2022, ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக்கூட்டத்தில் ஒப்புதல் பெறாததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்