கோவில் சொத்துகளை அபகரித்ததாக முன்னாள் தர்மகத்தா மீது மக்கள் புகார்
கோவில் சொத்துகளை அபகரித்ததாக முன்னாள் தர்மகத்தா மீது புகார்
மண்ணச்சநல்லூர் அருகே கோவிலுக்கு சொந்தமான பணம் மற்றும் ஆபரணங்களை கோவிலின் முன்னாள் தர்மகத்தா மோசடி செய்ததாக கிராம மக்கள் போலீசில் புகாரளித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மால்வாய் கிராமத்தில் உள்ள பூமி பாலகர் கோவிலில், முன்னாள் தர்மகர்த்தாவாக இருந்த பாஸ்கர் என்பவர் கோவில் பணம் மற்றும் ஆபரணங்களை மோசடி செய்ததாக கிராம மக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து முன்னாள் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு டிஐஜி மாணிக்கவேல் தலைமையில், பொதுமக்கள் கல்லக்குடி காவல் நிலையத்தில் முறையிட்டனர். மேலும், கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்து 85 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்ததாகவும், சட்டவிரோதமாக விற்றதாகவும் பாஸ்கர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Next Story
