பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி வெளியான ஷாருக் கானின் 'பதான்' .. கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்

x

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் 'பதான்' திரைப்படம் இன்று வெளியானது.

ஷாருக் கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவான பதான் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியானது முதல் இந்து அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இந்து மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி வந்தனர். இந்நிலையில், இன்று 'பதான்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நீண்ட நாள்களுக்கு பின்பு ஷாருக் கானை திரையில் பார்ப்பதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். எனினும், அசம்பாவிதங்களை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்