2 கைகளை இழந்த பாராலிம்பிக் வீரர்..9 மணி நேர போராட்டம்...57 கி.மீ..நீந்தி சென்றே மராத்தானை

x

பிரெஞ்சு நீச்சல் வீரர் தியோ குரின், ஒன்பது மணிநேரம் நீச்சலடித்து அர்ஜென்டினாவின் சாண்டா ஃபே-கொரோண்டா மராத்தானை முடித்த முதல் பாராலிம்பிக் வீரர் என்ற சாதனையை படைத்தார். மூளைக்காய்ச்சல் காரணமாக தனது ஆறாவது வயதில் கைகளை இழந்த தியோ குரின், 2 முறை உலக சாம்பியன் ஆனார். குரினின் முதுகில் அதிக வலி ஏற்பட்ட நிலையிலும் 57-கிலோமீட்டர் மாரத்தானை முடிக்கும் வரை நீந்தி அவர் சாதனை படைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்