காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து... பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

x

கேரள மாநிலம் பாலக்காட்டில், காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில், கார் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். ஓட்டப்பாலம் தென்வாடி பஜார் பகுதியில் நேற்று மதியம் கார் மீது லாரி ஒன்று மோதியது. அதில், காரை ஓட்டிச் சென்ற முஹமது என்ற முதியவர் உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விபத்து ஏற்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்