'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' VS 'கர்நாடக மாதாவுக்கு ஜே' கல்லூரி கலைநிகழ்ச்சியில் பரபரப்பு

x

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், விளையாட்டாக 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கூறிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாரத்ஹள்ளி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், கல்லூரிகள் இடையேயான கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மாணவர்கள் சிலர் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் எழுப்பினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கல்லூரியின் பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில், 3 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே, சக மாணவர்கள் சிலர், 'கர்நாடக மாதாவுக்கு ஜே' என அந்த மாணவர்களை முழக்கமிட வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்