அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த பாகிஸ்தான் | Pakistan | South Africa

x

டி20 உலகக்கோப்பை சூப்பர்-12 சுற்றில் தென் ஆப்பிரிக்காவை 33 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. சிட்னியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய பாகிஸ்தான் வீரர்கள் ஷதாப் கானும், இஃப்திகார் அகமதுவும் அரைசதம் அடித்தனர். பின்னர் 186 ரன்கள் இலக்கை நோக்கி, தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 14 ஓவர்களில் தென் ஆப்பிரிக்காவிற்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா, 14 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான், அரையிறுதி வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது.


Next Story

மேலும் செய்திகள்