பயங்கரவாதத்துக்கு இரையாகும் பாகிஸ்தான்.. பாக். தலிபான்கள் சதி.. 1045 பேருக்கு நேர்ந்த கதி.. சிதறும் உடல்கள்.. கொத்தாக சடலங்கள்

x

பாகிஸ்தானில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு தீவிரவாத தாக்குதல்கள் 79 % சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரமின்மை என அந்தரத்தில் தொங்கும் பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு, தற்கொலை படை தாக்குதல் என தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

Pakistan Institute for Conflict and Security Studies வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், 2022ம் ஆண்டின் முதல் பாதியை விட இந்தாண்டின் முதல் 6 மாதத்தில் 79 சதவீதம் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2023ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் நடந்த 271 தீவிரவாத தாக்குதல்களில் 389 பேர் பலியாகியுள்ளனர். 656 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

2022ம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 151 தீவிரவாத தாக்குதல்களில் 293 உயிரிழந்ததோடு 487 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதே ஆண்டின் அடுத்த 6 மாதத்தில் 228 தீவிரவாத தாக்குதல்களில் 249 பேர் உயிரழந்தனர், 349 பேர் படுகாயமடைந்தனர்.

அதே போல் 2023ம் ஆண்டின் முதல் பாதியிலேயே அதிக தாக்குதல் அரங்கேறியுள்ள நிலையில், அடுத்த பாதியில் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதில் 2023ம் ஆண்டின் முதல் பாதியில், அதிக பாதிப்புக்குள்ளான பகுதியாக கைபர் பக்துன்வா மாகாணமே கருதப்படுகிறது. இந்தாண்டின் முதல் 6 மாதத்தில் அங்கு நடந்த 174 தாக்குதல்களில் 266 பேர் உயிரிழந்துள்ளனர். 463 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

பழங்குடியின மாவட்டங்களை ஒப்பிடுகையில் 2022ம் ஆண்டின் முதல் பாதியை விட 2023ம் ஆண்டு 108 சதவீதம் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

பாகிஸ்தான் தலிபான்கள் எனப்படும் டிடிபி அமைப்பினர் கடந்த நவம்பர் மாதம் அரசுடன் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால், அதன் பின்னர் கைபர் பக்துன்க்வா, பலூசிஸ்தான் மாகாணங்களில் தாக்குதல் அதிகரித்தே உள்ளன.

இந்த தீவிரவாத செயல்களை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு கட்ட நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை முன்னெடுத்து வந்துள்ளது.

இந்தாண்டின் முதல் 6 மாதத்தில், 236 தீவிரவாதிகளை கொன்றதோடு சந்தேகிக்கும் வகையில் நடமாடிய 295 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்