ஆக்கிரமித்து கட்டப்பட்ட 160 வீடுகளை இடிக்க JCB-யுடன் வந்த அதிகாரிகள் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு நிலம் என்று நினைத்து, லட்சுமிபுரம் பகுதியில் வீடுகளை கட்டி, 160-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுமார் 25 ஆண்டுகளாக குடியிருந்து வரும் நிலையில், சுமார் 12 ஏக்கர் 67 சென்ட் நிலப்பரப்பு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என்று தெரியவந்தது‌. இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற பெக்லைன் இயந்திரங்களுடன் வந்த அதிகாரிகள் மற்றும் போலீசாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 5 வீடுகளை மட்டும் இடித்து விட்டு அதிகாரிகள் புறப்பட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக பதட்டமான சூழ்நிலை நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்