விமானப் பயணத்தில் அத்துமீறலில் ஈடுபட்டால் பறக்கத்தடை - விமான நிலையங்களுக்கு விமான போக்குவரத்து இயக்குநர் கடிதம்

x
  • இதுதொடர்பாக அனைத்து விமான நிறுவனங்களுக்கும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ரவீந்திர குமார் கடிதம் எழுதியுள்ளார்.
  • அதில், விமானத்தில் புகைபிடித்தல், மது அருந்துதல், பயணிகளுக்கு இடையே ஏற்படும் தகராறுகள், தகாத முறையில் நடந்து கொள்வது அல்லது பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்களைக் கையாள்வது சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சட்டத்தை மீறுபவர்கள் கைது செய்யப்படலாம். மது பானங்கள் அல்லது போதைப்பொருள்களை உட்கொள்வது, பயணிகளிடம் உடல்ரீதியாக அச்சுறுத்துதல், ஒழுங்கற்ற முறையில் நடந்துகொள்ளுதல் உள்ளிட்ட நிகழ்வுகளையும் விமான நிறுவனங்கள் வகைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் பயணிகள், விமானத்தில் பறக்கத் தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்