"புதிய பாம்பன் பால பணிகள்" - ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்

x

புதிய பாம்பன் பாலப்பணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் நிறைவு பெறும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 105 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில் பாலத்தில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு வந்தன.

இதனால் ரயில்களை மிக விரைவாக இயக்க முடியாததால், புதிய பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்தது. சுமார் 535 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தின் 84 சதவீத பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது.

இதுவரை 101 தூண்கள், 76 இணைப்பு கிர்டர்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரயில்வே நிர்வாகம், புதிய ரயில்பால கட்டுமான பணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையும் என அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்