நெருங்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. அதிமுக சார்பில் களமிறங்கும் போட்டியாளர் யார்? | AIADMK

x

ரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே வி ராமலிங்கம் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தென்னரசிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட முன்னாள் அமைச்சர் கேவி ராமலிங்கம் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள பணிக்குழுவில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதேசமயம், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு பெயர் தேர்தல் பணி குழுவில் இடம் பெறவில்லை. இதை வைத்துப் பார்க்கும்போது தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலில் போட்டியிட கேஎஸ் தென்னரசு விருப்ப மனுவை அளித்திருந்தார். விருப்ப மனு அளிக்கும் கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்