நாமக்கல்லில் முட்டை விலை தொடர் சரிவு

x

நாமக்கல்லில் முட்டை விலை தொடர்ந்து சரிந்து வருவதால், பண்ணையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 4 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன.

இங்கு கடந்த 9 ம் தேதி ஒரு முட்டை 5 ரூபாய் 65 காசாக உயர்ந்த முட்டையின் விலை, கடந்த 6 நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்நிலையில், ஒரு முட்டையின் விலையை 4 ரூபாய் 90 காசாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயம் செய்துள்ளது. கடந்த 6 நாட்களில் 75 காசுகள் சரிவடைந்துள்ளது.

இதனால், நாள்தோறும் 4 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால், பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்