வீட்டு பெட்ரூமை டார்ச் லைட் அடித்து எட்டி பார்த்த மப்ளர் ஆசாமிகள் - பதற வைக்கும் காட்சிகள்

x

நாமக்கல் அருகே, அரிவாளுடன் வீடுகளில் வலம் வந்த கொள்ளையர்களால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். நாமக்கல் நகராட்சி சாய் நகர், பிருந்தா நகர் பகுதிளில், நள்ளிரவில் கொள்ளையர்கள் இருவர், அரிவாளுடன் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து திருட முயற்சித்துள்ளனர். கொள்ளையர்களைக் கண்ட அப்பகுதி மக்கள், சத்தம் போட்டதை அடுத்து, அவர்கள் அங்கிருந்து தப்பியுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்