மெரினாவில் இளைஞர் மர்ம மரணம்.. நண்பர் பிறந்தநாள் கொட்டாட்டத்தில் விபரீதம் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

x

சென்னை, மெரினாவில் நண்பரின் பிறந்த நாளை கொண்டாட வந்த 20 வயது இளைஞர், கடற்கரையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

சென்னை, மெரினாவில் பொது பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் 3 இளைஞர்கள் மயங்கிய நிலையில் கிடப்பதாக போலீசார்க்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மயங்கிய நிலையில் இருந்த 3 இளைஞர்களையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆவடியை சேர்ந்த மூவரில் விக்னேஷ் என்பவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், அரவிந்த், சஞ்சய் ஆகிய இரு இளைஞர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று சஞ்சயின் பிறந்தநாளை கொண்டாட மூவரும் இருசக்கர வாகனத்தில் மெரீனா வந்துள்ளனர். அப்போது, இளைஞர்களின் ஹெல்மெட் கணாமல் போன நிலையில், அதை தேடி வந்த இளைஞர்களை திருடர்கள் எனக்கூறி அங்கிருந்த கடைக்காரர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்ததால் இளைஞர் உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பாக மூவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்