"என் இனிய தமிழ் மக்களே..." - பாசத்திற்குரிய பாரதிராஜா பிறந்த நாள்

x

இயக்குநர் இமயம் எனும் சிறப்பு பெற்ற பாரதிராஜா இன்று தனது 82வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்...

"என் இனிய தமிழ் மக்களே" என்ற இவரது குரலைக் கேட்கவே தனி ரசிகர் பட்டாளம் உண்டு...

முதல் படைப்பான 16 வயதினிலே திரைப்படத்தில் இருந்தே மக்கள் மனதில் இடம் பிடித்த பாரதிராஜா, அடுத்தடுத்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்கு சீமையிலே, கருத்தம்மா என பல கருத்தான படங்களைத் தந்து புகழின் உச்சிக்கே சென்றார்.

தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ள பாசத்திற்குரிய பாரதிராஜாவுக்கு நாமும் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.


Next Story

மேலும் செய்திகள்