வாரி இறைத்த பணம்.. Connect-ஆன கள்ளக்காதல்.. சந்தேக கணவனுக்கு பிளாஸ்டிக் கவரால் பாடை கட்டிய மனைவி!

x

ஆசை திரைப்பட பாணியில் கணவனை கொல்ல திட்டமிட்டு, தகாத உறவில் இருந்த காதலனுடன் சேர்த்து மனைவி அரங்கேற்றிய கொலை சம்பவம் மூன்று மாதங்களுக்கு பின்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி... வீராணம் ஏரியில் மிதந்த சடலத்தை கண்டு மிரண்டு போன பகுதி மக்கள்...

சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்ட போலீசார்... நபர் மீது மது அருந்தியதற்கான அறிகுறிகள் தென்படவே மதுபோதையில் ஏரியில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்றும்... உடலில் இருந்த காயங்கள் அவர் கொலை செய்யப்படிருக்கலாம் என்றும்... குழம்பி போய் விசாரணையை துரிதப்படுத்திய நிலையில், மூன்று மாதங்களுக்கு பின்பு வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது...

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்... இவருக்கு தீபா என்பவருடன் திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், கோயம்புத்தூரில் தங்கி பணியாற்றி வந்துள்ளார்...

இந்நிலையில், குழந்தைகளுடன் தனியே வசித்து வந்த தீபாவுக்கு, அதே பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது...

வட்டிக்கும் பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த சுகுமாரிடம், சக்திவேலின் மனைவி தீபாவும் பணம் பெற்றிருந்த நிலையில், பணத்தை வசூலிப்பதற்காக அடிக்கடி வீட்டிற்கு வந்த சுகுமாருடன், தீபாவுக்கு ஏற்பட்ட பழக்கம் தகாத உறவாக மாறியுள்ளது...

இதில், காதலியை திருப்தி படுத்தவும், சந்தோஷம் படுத்தவும் நினைத்த சுகுமார், சக்திவேலின் மனைவி தீபாவுக்கு பணத்தை வாரி இறைத்திருக்கிறார்...

இந்நிலையில், திடீரென கோயம்புத்தூரில் இருந்து சொந்த ஊர் திரும்பிய சக்திவேல் , மனைவி செல்வ செழிப்புடன் இருப்பதை பார்த்து குழம்பி போக, சந்தேகம் ஏற்படாமல் இருக்க அவருக்கு சுகுமாரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் மனைவி தீபா...

குடும்பத்துக்காக வெளியூரில் தங்கி நீங்கள் படும் கஷ்டத்தையும், நமது குடும்ப நிலையையும் கண்டு நமக்கு கடன் வழங்கி உதவி செய்ததாக கூறி சுகுமாரை அறிமுகப்படுத்தியிருக்கிறார்...

இதை நம்பிபோன சக்திவேல், சுகுமாருடன் பழகி வந்த நிலையில், அடிக்கடி ஒன்றாக மதுஅருந்தும் அளவுக்கு சென்றிருக்கிறது இருவருக்குமிடையேயான பழக்கம்...

ஆரம்பத்திலேயே, மனைவியின் மீது சிறிது சந்தேகம் கொண்டிருந்த சக்திவேலுக்கு, மனைவி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டே இருந்ததும், அவரின் நடத்தையில் ஏற்பட்ட மாறுபாடுகளும் அவரது சந்தேகத்தை வலுப்படுத்தி கொண்டே இருந்தது...

ஒரு கட்டத்தில் இருவரின் தகாத உறவும் சக்திவேலுக்கு தெரியவர, இது குறித்து மனைவியிடம் கேட்டு சண்டையிட்டிருக்கிறார்...

ரகசியமாக வளர்த்து வந்து காதல் கணவருக்கு தெரியவந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த தீபா, தொடர்ந்து தகாத உறவுக்கு கணவர் இடையூறாக இருந்ததால் எரிச்சலடைந்துள்ளார்...

இந்நிலையில், காதலன் சுகுமாருடன் சேர்ந்து கணவரை தீர்த்துகட்ட திட்டம் தீட்டிய நிலையில், சம்பவத்தன்று சுகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து சக்திவேலை மது அருந்த அழைத்திருக்கிறார்...

வீராணம் ஏரியில் வைத்து அனைவரும் மது அருந்திக் கொண்டிருந்த போது, ஆசை திரைப்பட பாணியில் சக்திவேலின் முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி அவரை மூச்சடைக்க செய்துள்ளனர்...

மூச்சு விட முடியமால் துடிதுடித்த சக்திவேலை, சுகுமாரின் நண்பர்கள் தாக்கவும் செய்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்த அவரை, தூக்கி வீராணம் ஏரியில் வீசி சென்றது தெரியவந்துள்ளது...

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட சக்திவேலின் மனைவி மற்றும் அவரின் தகாத உறவு காதலன் சுகுமாரை கைது செய்த போலீசார், சம்பவத்தன்று சக்திவேலை மது அருந்த அழைத்து வந்த காரையும் பறிமுதல் செய்த நிலையில், கொலைக்கு உடந்தையாக இருந்த சுகுமாரின் நண்பர்கள் இருவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்