கார் ஹேண்ட் பிரேக்கில் ரகசிய அறையில் அள்ள அள்ள வந்து கொண்டே இருந்த கட்டு கட்டாக பணம் | Kerala
கேரள மாநிலம் மலப்புரம் அருகே, கார் ஹேண்ட் பிரேக்கின் கீழ் ரகசிய அறை அமைத்து, ஒரு கோடியே 68 லட்சம் ரூபாய் கடத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டனர். வளஞ்சேரி - பெரிந்தல்மன்னா சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஹேண்ட் பிரேக்கின் கீழ் ரகசிய அறை அமைத்து, உரிய ஆவணமின்றி ஒரு கோடியே 68 லட்ச ரூபாய் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த வளஞ்சேரி போலீசார், இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story