நதிக்கு அடியில் மெட்ரோ ரயில்..இந்தியாவிலேயே இதுதான் முதன் முறை - கொல்கத்தாவில் சோதனை வெற்றி

x

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நதிக்கடியில் மெட்ரோ ரயிலை இயக்கி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. கொல்கத்தாவில் இருந்து ஹவுராவுக்கு மெட்ரோ ரயிலை இயக்க, ஹுக்ளி நதியின்கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள மகாகரன் ரயில் நிலையத்தில் இருந்து, ஹுக்ளி நதியின் மறுபக்கம் அமைந்துள்ள ஹவுரா மெய்டன் ரயில் நிலையம் வரை, சோதனை முறையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. வெள்ளோட்டத்தில் மெட்ரோ உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பயணிகளுக்கு நவீன சேவை வழங்குவதற்தாக, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்