காமராஜரை பற்றி அவதூறாக பேசிய விவகாரம் - நாடார் சங்கங்களின் கூட்டத்தில் முடிவு

x

காமராஜரை பற்றி அவதூறாக பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து, சென்னையில் வரும் 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, நாடார் சங்கங்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த நாடார் சமுதாய சங்கங்கள் சார்பில் ஆலந்தூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காமராஜர் புகழுக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் கொச்சைப் படுத்தி பேசிய ஆர்.எஸ்.பாரதி, தனது பேச்சிற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கோரிய பிறகும், எந்த தகவலும் கிடைக்காத நிலையில், போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் வருத்தம் தெரிவிக்கும் வரை காந்திய வழியில் தொடர் அறப்போராட்டங்கள் நடைபெறும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்