பியூட்டி பார்லருக்குள் புகுந்த Old லேடி.. இமைக்கும் நொடியில் தலையில் கல்லா பெட்டி - பரபரப்பு காட்சிகள்

• பியூட ்டி பார்லரில் 2 லட்சம் ரூபாயை திருடி கொண்டு எதுவுமே நடக்காதது போல அமைதியாக சென்ற மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர். • மதுரை அப்பாதுரை பகுதியை சேர்ந்த ரமீஷ் பாத்திமா என்பவர் நடத்திவரும் அழகு நிலையத்தில் இருந்த 2 லட்சம் ரூபாய் ரொக்கம் திருடப்பட்டுள்ளது. • இது குறித்த புகாரின் பேரில் அங்கிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். • அதில் மூதாட்டி ஒருவர் ஆள் இல்லாத போது சர்வ சாதாரணமாக கடைக்குள் புகுந்து அங்கிருந்த 2 லட்சம் ரூபாய் ரொக்கம் அடங்கிய பெட்டியை எடுத்து தலையில் வைத்து கொண்டு செல்வது பதிவாகியுள்ளது. • இந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் மூதாட்டியை தேடி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com