மதுரையில் ஜல்லிக்கட்டு - வெளியான முக்கிய அறிவிப்பு

மதுரையில் ஜல்லிக்கட்டு - வெளியான முக்கிய அறிவிப்பு
x

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 15ஆம் தேதியும், பாலமேடு ஜல்லிக்கட்டு 16ஆம் தேதியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

இதற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வெளியிட்டு உள்ளார்.

அதில் மாடுபிடி வீரர்கள் Madurai.nic.in என்ற இணையதளத்தில் தங்களது புகைப்படத்தை பதிவேற்றம் செய்து இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

போட்டி நடைபெறும் இரு நாட்களுக்கு முன்பாக கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு வருபவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு Madurai.nic.in என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மாட்டின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் என இரு நபர்கள் காளையுடன் வர முடியும். அவர்களும் இரண்டு தவணை கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.

ஜல்லிக்கட்டு காளைகள் மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே பங்கு பெற முடியும்.

ஜல்லிக்கட்டு போட்டியில் 300 மாடு பிடி வீரர்கள், 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பார்வையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் அவசியம் என தெரிவிக்கப்பட்ள்ளது.



Next Story

மேலும் செய்திகள்