"தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடையை மூட வேண்டும்" - நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Tasmac | ThanthiTV

x

ராமநாதபுரம் மாவட்டம், செட்டியார்மடை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை மூடுவதற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அந்தக் கடையைச் சுற்றிலும் வழிபாட்டுத்தலங்களும் கல்வி நிறுவனங்களும் இருப்பதால், நீதிமன்ற உத்தரவின்படி கடை இடமாற்றம் செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் அதே இடத்தில் மதுபானக் கடை திறக்கப்பட்டது. இதை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே இடமாற்றம் செய்யப்பட்ட மதுபானக் கடையை அதே இடத்தில் மீண்டும் திறக்க அனுமதித்தது எப்படி என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அந்த கடையை மூடுவதற்கு உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்