இன்று கூடும் சட்டப்பேரவை - ஆளுநருக்கு எதிராக தனித் தீர்மானம்

x

ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தாலே அது நிராகரிக்கப்பட்டதாகத்தான் அர்த்தம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திட வேண்டும் என தமிழ்நாடு ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் கொண்டு வர உள்ளார். அதில், மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசையும் குடியரசு தலைவரையும் வலியுறுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்