இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி - NIA-வுக்கு அதிரடி உத்தரவு

x

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடந்த மாதம் சென்ற காலிஸ்தான் ஆதரவாளர்கள், அம்ரித்பாலுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி, அங்கு கொடிக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்த இந்திய தேசியக்கொடியை இறக்கிவிட்டு, காலிஸ்தான் கொடியை பறக்கவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, காலிஸ்தான் ஆதரவாளர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

இந்திய தேசியக்கொடி மீண்டும் பறக்கவிடப்பட்டது.

சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க இங்கிலாந்து வெளியுறவுத் துறைக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது.

இதுதொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்