மினி லாரி மீது மோதிய வேன்.. ஐயப்பனை தரிசித்துவிட்டு திரும்பிய பக்தர்களுக்கு நேர்ந்த விபரீதம்

x

கர்நாடகாவில் இருந்து இருமுடி கட்டி வந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் முடித்து விட்டு திரும்பி உள்ளனர்.

அப்போது, கண்ணூர் கூத்துபரம்பா சாலையில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன், மினி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், வேனில் இருந்த பெங்களூருவை சேர்ந்த சேர்ந்த 23 பேரில் குழந்தைகள் உட்பட 15 பேர் படுகாயமடைந்தனர்.

வேனில் சிக்கிய பயணிகளை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்டனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்