களைகட்டிய கார்த்திகை சோமவாரம்...குற்றாலத்தில் அலைமோதிய பெண்கள் கூட்டம் | Kuttralam | Ladies

x

கார்த்திகை மாதம் திங்கள்கிழமைகளில் அதிகாலை நேரத்தில் புனித நீராடி பூஜை செய்தால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என கருதப்பட்டு வருகிறது. இதனால், இன்று அதிகாலையில் குற்றாலம் அருவிகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் குளித்தனர். பின்னர், அங்குள்ள விநாயகர் கோயில் முன்பு வெற்றிலை, பாக்கு, பழம், பூ, மஞ்சள் கயிறு போன்றவற்றை வைத்து விளக்கு ஏற்றி பூஜை செய்தனர். பெண்கள் கூட்டம் அதிகரித்ததால், ஆண்கள் குளிக்கும் பகுதியில் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால், மெயின் அருவியில், ஆண்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.


Next Story

மேலும் செய்திகள்