இரண்டே நாளில் முடிந்த திருமண வாழ்க்கை.. புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த கதி -உயிருக்கு போராடும் மணப்பெண்

x

இரண்டே நாளில் முடிந்த திருமண வாழ்க்கை.. புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த கதி - உயிருக்கு போராடும் புது மணப்பெண்

காரைக்குடியில் இருசக்கர வாகனமும், காரும் மோதி விபத்துக்குள்ளானதில், புது மாப்பிள்ளை உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில், ஆவுடபொய்கை அருகே, திருமணமான 2 நாட்களே ஆன தம்பதிகளான மதன்குமார் மற்றும் ந‌தியா ஆகியோர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது, கார் ஒன்று பயங்கரமாக மோதி பள்ளத்தில் விழுந்த‌து. இதில், படுகாயமடைந்த மதன்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த ந‌தியாவும், காரில் இருந்த இரண்டு பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருமணமான 2 நாட்களில் புது மாப்பிள்ளை உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்