அரசு கல்லூரியில் 8 மாணவர்களுக்கு கொரோனா.. விடுமுறை அளிக்க ஆட்சியருக்கு பரிந்துரை | Karaikkal

• காரைக்கால் அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. • காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. • இந்நிலையில், பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. • கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தனிமைப்படுத்துதலில் உள்ளனர். • கல்லூரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். • இந்த கல்லூரிக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com