போலி தங்க நகைகளை விற்று மோசடி செய்த தங்கத்தை ஆந்திரா சென்று தூக்கிய போலீஸ் | Karaikkal

x
  • காரைக்காலில் போலி நகைகளை விற்று 15 கோடி ரூபாய் மோசடி செய்து, தலைமறைவாக இருந்த பெண் தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.
  • தமிழகம் மற்றும் காரைக்காலில் தங்க முலாம் பூசி போலி நகைகளை, நகைக் கடைகளில் விற்பனை செய்தும், வங்கிகள், அடகு கடைகளில் அடகு வைத்தும் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், புதுச்சேரி சப் இன்ஸ்பெக்டர் ஜெரோம் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டு தலைமறைவாக இருந்த பெண் தொழிலதிபர் புவனேஸ்வரியை 3 தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
  • சென்னை, விஜயவாடா, விசாகப்பட்டினம் பல நகரங்களுக்கு சென்ற அவரை கண்காணித்து வந்த போலீசார், அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லாத வகையில் பாஸ்போர்ட்டை முடக்கி, லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட்டனர்.
  • இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு நட்சத்தி விடுதியில் ஆந்திர தொழிலதிபர் உதவியுடன் தங்கி இருந்த புவனேஸ்வரியை தனிப்படை போலீசார் கைது, காரைக்காலுக்கு அழைத்து வந்தனர்.
  • அவரிடம் நடத்திய விசாரணையில், 50 லட்சம் ரூபாய் முதலீட்டில் தங்கம் வாங்கி, அதன் மூலம் போலி நகைகள் தயாரித்து விற்பனை செய்து, 15 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாக புவனேஸ்வரி வாக்குமூலம் அளித்தார்.
  • இதனை அடுத்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்