கன்வர் யாத்ரீகர்களுக்கு... ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு

x

உத்தரகண்ட் மாநிலத்தில், ஹெலிகாப்டர் மூலம் பூமழை பொழிந்து, கன்வர் யாத்ரீகர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து இந்துக்கள் விரதம் மேற்கொண்டு, வாரணாசி, கேதார்நாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு பாதயாத்திரை சென்று கங்கை நதியில் நீராடுவார்கள். இதுபோன்று யாத்திரை மேற்கொள்பவர்கள் கன்வாரியாக்கள் என அழைக்கப்படுவர். அதன்படி, இந்த ஆண்டு கன்வர் யாத்திரை மேற்கொண்டுள்ள யாத்ரீகர்கள், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்