ஓடி வந்து செருப்பால் அடித்த நகைக்கடை உரிமையாளர்... கையெடுத்து கும்பிட்ட யாசகர் - அதிர்ச்சி காட்சி

x

குமரி அருகே வயதான யாசகர் ஒருவரை நகைக்கடை உரிமையாளர் காலணியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குலசேகரம் பகுதியில் இயங்கி வரும் நகைக்கடை ஒன்றில் வயதான ஒருவர் யாசகம் கேட்டு சென்றுள்ளார். அப்போது, திடீரென பின்னால் இருந்து ஓடி வந்த நகைக்கடை உரிமையாளர் ராஜா என்பவர், தனது காலணியை எடுத்து தாக்கியதுடன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்