அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி கபடி போட்டி... கற்களை வீசி மோதிக்கொண்ட இரு தரப்பினர் - தூத்துக்குடியில் பரபரப்பு

x

விளாத்திக்குளம் அருகேயுள்ள குளத்தூர் பகுதியில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றுள்ளது. அப்போது போட்டியில் வெற்றி பெற்ற அணியினர், தோல்வியுற்ற அணியினரை கைதட்டி எரிச்சல் ஊட்டும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், இளைஞருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இரு தரப்பினரும் கற்களை வீசி மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், ஒரு சிறுமி உட்பட 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்