ஜல்லிக்கட்டு போட்டி - வீரர்கள் கவனத்திற்கு...மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

x

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான உரிய வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் அறிவுறுத்தியுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் வரும் 15,16, 17-ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் கலந்து கொள்பவர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காளை பரிசோதனை சான்றிதழ், காளையை கொண்டு செல்வதற்கான சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் பெற்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், காளையின் உரிமையாளர்களுக்கு மட்டுமே, காவல் சோதனைச் சாவடிகளில் அனுமதி வழங்கபடும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்