"தமிழகத்திற்கு வருவது எப்போதும் மகிழ்ச்சி தருகிறது" - பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நெகிழ்ச்சி

x

தமிழகத்திற்கு வருவது தனக்கு எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாக நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறி உள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தனியார் விளையாட்டு உபகரண விற்பனை மையத்தை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த சிந்துவிற்கு செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடிய சிந்து அங்கு பயிற்சி பெறும் பேட்மிண்டன் வீரர்களுடன் விளையாடி மகிழ்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்