இரானி கோப்பை... மத்தியப்பிரதேசம் மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா மோதல்

x

மத்தியப்பிரதேசம் மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா ஆகிய அணிகள் பங்கேற்கும், இரானி கோப்பை டெஸ்ட் போட்டி குவாலியரில் தொடங்கியது. டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி, முதலில் பேட்டிங் செய்தது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி, முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 381 ரன்களை குவித்துள்ளது. ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்த நிலையில் 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மேலும் சதம் விளாசிய அபிமன்யூ ஈஸ்வரன், 154 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்