இந்திய-சீன படைகள் எல்லை மோதல் எதிரொலி..? - இந்தியா வந்தடைந்தது கடைசி ரஃபேல் விமானம்! Rafale

x

மத்திய அரசின் ஒப்பந்தத்தின்படி, பிரான்சில் உருவான கடைசி ரஃபேல் போர் விமானம் இந்தியா வந்தடைந்துள்ளது.

பிரான்ஸின், டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க, 2016ம் ஆண்டு மத்திய அரசு, பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்நிலையில், ஒப்பந்தத்தின்படி உருவாக்கப்பட்ட 36வது மற்றும் கடைசி விமானம் பிரான்சில் இருந்து இந்தியா வந்து இறங்கியது. முன்னதாக , வழங்கப்பட்ட 35 போர் விமானங்கள், மேற்குவங்கம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த போர் விமானங்கள் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 3 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செல்லும் திறன் கொண்டவை. மேலும், அதிகபட்சமாக மணிக்கு 2 ஆயிரத்து 223 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்க முடியும். இலக்கை துல்லியமாக அடையாளம் கண்டு அழிக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகள் மற்றும் நவீன ஆயுதங்களை இந்த ரஃபேல் விமானங்களில் பொருத்த முடியும். 15 புள்ளி 3 மீட்டர் நீளம் கொண்ட இந்த போர் விமானங்கள், சுமார் 10 டன் எடை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்