எரிந்து சாம்பலான இந்திய விமானப்படை விமானம்.. பைலட்கள் என்ன ஆனார்கள்?

x

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படை பயிற்சி விமானம் விபத்தில் சிக்கி எறிந்து நாசம். விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் பாராசூட் மூலமாக குதித்து உயிர் தப்பினர்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் போகாபூர் என்ற கிராமத்தின் அருகே இந்திய விமானப்படை பயிற்சி விமானம் இன்று விபத்தில் சிக்கி எரிந்து நாசம் ஆனது. இந்த விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் விபத்தில் இருந்து தப்பிக்க பாராசூட் மூலமாக குதித்து உயிர் தப்பியுள்ளனர். விபத்தில் சிக்கிய பயிற்சி விமானம் இலகு ரக கிரண் விமானம் என்று தெரியவந்துள்ளது. வானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில் நுட்ப கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியுள்ளது. விமானம் தரையில் விழுந்து சிதறியுள்ள நிலையில் அங்கு காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து இந்திய விமானப்படை விரிவான விசாரணை நடத்த உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்