சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் திருத்தம்... பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா

x

சிந்து ந‌தி நீர் ஒப்ப‌ந்த‌த்தில் மாற்றம் செய்யக்கோரி, பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிந்து நதி நீரை பகிர்ந்து கொள்ள 1960-ம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 'சிந்து நதி நீர் ஒப்பந்தம்' கையெழுத்தானது.

இரு நாடுகளும் தரவுகளை பரிமாறிக்கொள்ள, சிந்து ஆணையம் அமைத்து, ஆணையர்களை நியமித்துள்ளன.

இந்நிலையில், இந்த ஒப்பந்த‌த்தில் மாற்றம் செய்யக்கோரி கடந்த 25ஆம் தேதி பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாகிஸ்தானின் நடவடிக்கைகள், ஒப்பந்த‌த்தின் விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும், இதனால், ஒப்பந்த‌த்தை மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்