ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆம் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
x

ஆடுகளத்தில் ஈரப்பதம் இருந்ததால் நாக்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் பின்ச் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மேத்யூ வேட் அதிரடியாக விளையாடி 43 ரன்கள் அடித்தார். 8 ஓவர்களில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா அடுத்தடுத்து சிக்சர்களைப் பறக்கவிட்டார். கே.எல்.ராகுல் 10 ரன்களுக்கு நடையைக் கட்ட, கோலியும் சூர்யகுமார் யாதவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா, 20 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வழிவகுத்தார். இதனால், கடைசி ஓவரில் இந்தியா இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1க்கு 1 என்ற கணக்கில் சமனிலை வகிக்கின்றன.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆம் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி


Next Story

மேலும் செய்திகள்