விடுதலை போரில், 9 வருடங்கள் சிறை வாசம்... இவரால் தமிழகம் - கல்வி, தொழில் வளர்ச்சியில் சாதனை- 2 பிரதமர்களை உருவாக்கிய கிங் மேக்கர் காமராஜர்

x

கர்ம வீரர் காமராஜர் பிறந்த தினம் இன்று. அவரின் வாழ்க்கை சுவடுகள் பற்றி விவரிக்கிறது இந்தத் தொகுப்பு

1903 ஜூலை 15ல், விருதுநகரில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த காமராஜர், ஆறாம் வகுப்பு வரை மட்டுமே பயின்றார். குடும்ப வறுமை காரணமாக இளம் வயதில் தனது மாமாவின் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

16 வயதில் காங்கிரஸில் சேர்ந்த காமராஜர், சுதந்திர போராட்டத்தில் ஈடுப்பட்டு, மொத்தம் 9 வருடங்கள் சிறையில் இருந்தார். சிறந்த பேச்சாளரும் நாடாளுமன்றவாதியும் ஆன சத்தியமூர்த்தியைத் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார்.

1937 பொது தேர்தலில் சாத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார் காமராஜர். 1946இல் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.

1954ல் தமிழக முதல்வாரான காமராஜர், 1963 வரையில் மிகச் சிறப்பாக பணியாற்றி பெரும் புகழ் பெற்றார். தமிழக பள்ளிக் கல்வித் துறையை வளர்த்தெடுத்து, ஏராளமான புதிய பள்ளிகளை திறந்தார்.

மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை அறிமுகப் படுத்தினார். பரம்பிகுளம் ஆழியார் அணை உள்ளிட்ட 10 முக்கிய நீர் பாசன திட்டங்களை நிறைவேற்றினார்.

நெய்வேலி அனல் மின் நிலையம், பெல் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை உள்ளிட்ட ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொடங்க வகை செய்தார்.

1963ல், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த காமராஜர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.

1964ல் நேரு மறைந்த பின், லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வகை செய்தார். 1966ல் சாஸ்திரி மறைந்த பின், இந்திரா காந்தியை பிரதமராக்கி, கிங் மேக்கர் என்று அழைக்கப்பட்டார்.

1969ல், காங்கிரஸ் கட்சி பிளவுடைந்த பின், ஸ்தாபன காங்கிரஸின் முக்கிய தலைவராக உருவெடுத்தார்.

1975இல் காந்தி ஜெயந்தி அன்று காலமானார்.

தமிழக வரலாற்றில் முத்திரை பதித்த கர்ம வீரர் காமராஜர் பிறந்த தினம், 1903, ஜூலை 15.


Next Story

மேலும் செய்திகள்