ஊராட்சி செயலாளர்களை மிரட்டி பணம் வசூல் - நூதனமாய் வசூல்வேட்டை நடத்தியவர் கைது

x
  • கோவையில், கிராம ஊராட்சி செயலாளர்களை குறி வைத்து மிரட்டி, பணம் பறித்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
  • பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், கீரணத்தம் ஊராட்சி அலுவலகத்துக்கு புகார் மனு ஒன்றினை அனுப்பினார்.
  • அதில், ஊராட்சியில் செயலாளராக பணியாற்றும் பாலாஜி என்பவர், போலி ஆவணங்கள் கொடுத்து பணியில் சேர்ந்ததாகவும், அவரது ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
  • இது தொடர்பாக ராஜாவை அழைத்து ஊராட்சி செயலாளரான பாலாஜி விவரம் கேட்டபோது, புகார் மனு அனுப்பாமல் இருக்க பணம் தர வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
  • இதனால் பயந்துபோன பாலாஜி, 75 ஆயிரம் ரூபாயை ராஜாவிடம் வழங்கியுள்ளார்.
  • ஆனால், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததால், விரக்தி அடைந்த பாலாஜி இதுகுறித்து, காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
  • அதன்பேரில் ராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, இதேபோன்று பல ஊராட்சி செயலாளர்களை மிரட்டி பணம் பறித்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ராஜாவை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்