"தலிபான்களை சீண்டினால்... பாகிஸ்தான் நிலை விபரீதமாகும்" - இம்ரான் கான் எச்சரிக்கை...

x

"தலிபான்களை சீண்டினால்... பாகிஸ்தான் நிலை விபரீதமாகும்" - இம்ரான் கான் எச்சரிக்கை...


தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு பொறுப்பற்ற முறையில் அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.


தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்புக்கு எதிரான பாகிஸ்தான் அரசின் நடவடிக்கைகள் குறித்து இம்ரான் கான் கடுமையான விமர்சனம் செய்துள்ளார். பயங்கரவாதம் குறித்த கருத்தரங்கில் உரையாற்றிய இம்ரான் கான் ஆப்கானிஸ்தானுடனான உறவுகள் மோசமடைந்தால், பயங்கரவாதத்திற்கு எதிரான மற்றொரு போர் பாகிஸ்தானுக்கு சாபமாக மாறும் என்று தெரிவித்தார். அமெரிக்காவின் உதவியை பாகிஸ்தான் நாடக் கூடாது என்று வலியுறுத்திய அவர், ஆப்கானிஸ்தான் உடனான உறவுகளில் சீர்குலைவு, பயங்கரவாதத்திற்கு எதிரான "முடிவில்லாத" போருக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்