"எனக்கு அந்த காசு கூட வேணாம்" - விரக்தியில் மொத்தமாக அழித்த விவசாயி

x

ஒசூரில் விரக்தியில் இருந்த விவசாயி ஒருவர், டிராக்டர் கொண்டு முள்ளங்கி தோட்டத்தை உழுது அழித்தார்.

ஒசூர் அருகே உள்ள ஆலூர் தின்னூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராமமூர்த்தி. இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில், 30 ஆயிரம் ரூபாய் செலவில் முள்ளங்கி பயிர்களை பயிரிட்டிருந்தார். ஆனால் ஒரு கிலோ முள்ளங்கி சந்தையில் 18 முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், விவசாய தோட்டங்களில் விவசாயிகளிடம் ஒரு கிலோ முள்ளங்கி 4 - முதல் 5 ரூபாய்க்கு விலை கேட்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முள்ளங்கி விலை வீழ்ச்சியடைந்ததால் வேதனையடைந்த விவசாயி ராமமூர்த்தி, தனது 2 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த முள்ளங்கிகளை டிராக்டர் கொண்டு உழுது அழித்தார். இதில் சுமார் 15 டன் முள்ளங்கிகள் சேதமானதாக தெரிவித்தார். இந்த நிலத்தில் அடுத்ததாக சந்தையில் நல்ல விலை போகும் மலர்கள் அல்லது முட்டைகோஸ் போன்ற பயிர்களை நடவு செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்