பிரமாண்டமான முருகன் சிலை...விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹார விழா - பக்தர்கள் புடை சூழ உற்சவர் பவனி

x

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியில் உலகிலேயே அதிக உயரமான முருகன் சிலையை கொண்டு முத்துமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்தநிலையில் இக்கோயிலில் சூரசம்ஹார விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் இரண்டாம் நாளில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து உற்சவர், சிறப்பு அலங்காரத்தில் கோயிலை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்