அகமதாபாத்தில் எகிறும் ஹோட்டல் ரூம் விலை... ஹாஸ்பிட்டல் பெட்களை குறிவைக்கும் ரசிகர்கள் -ஏன் தெரியுமா?

x

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில், ரசிகர்களின் பி.பி.யை எகிறச் செய்யும், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி, அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

போட்டி அட்டவணை வெளியிடப்பட்ட சில தினங்களிலேயே அகமதாபாத்தில் உள்ள ஓட்டல்களில் முன்பதிவு முடிந்துவிட்டது. ஒருநாள் தங்குவதற்கான குறைந்தபட்ச கட்டணம் ஐம்பதாயிரத்தில் தொடங்கி ஒரு லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 மடங்கு கட்டணம் செலுத்தியும் ஓட்டல்களில் அறை கிடைக்காததால், மாற்றுவழி தேட தொடங்கியுள்ளனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

அதன்படி, அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் பெட்களை குறிவைத்து படையெடுக்க தொடங்கியுள்ளனர் ரசிகர்கள். அங்கும், ஒருநாள் தங்குவதற்கான குறைந்தபட்ச கட்டணம் மூவாயிரத்தில் தொடங்கி முப்பதாயிரம் ரூபாயை தாண்டிவிட்டது. இதனிடையே, இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த மருத்துவமனை நிர்வாகிகள், அங்கு தங்க விரும்புவோர், கட்டாயம் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டுமென்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.இந்த தடாலடி அறிவிப்பால், ரசிகர்கள் சற்று வெலவெலத்துப் போனாலும், அகமதாபாத்தில் தங்குவதற்கு, இதை தவிர வேறு வழியில்லை என்ற சோதனைக்கு தயாராகிவிட்டனர்.எனினும், மருத்துமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டால், அவருடன் சேர்ந்து இன்னொரு நபர் இலவசமாக தங்கிக் கொள்ளலாம் என்பதால், மருத்துவமனை அறைகளுக்கான முன்பதிவும் இப்போதே நிரம்பத் தொடங்கிவிட்டது. எப்படியாவது இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலில், ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக தயாராகிவிட்டார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்


Next Story

மேலும் செய்திகள்